Tuesday, October 14, 2008

ஐ.தே.க கட்சியில் இருந்து அரசுடன் இணைந்துள்ள பலர் மீண்டும் கட்சி தாவலாம்.



ஐ.தே.க யின் அதிருப்தி குழுவினர் மீண்டும் ஐ.தே.கட்சியுடன் இணைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன மற்றும் பல உறுப்பினர்கள் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகவும் அனைவரும் ஒன்று சேர்ந்து பேசுவதற்கான நாள் ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்ற அமைச்சர் கருஜெயசூரியவின் தாயாரின் மரணச் சடங்கில் அரச அதிபர் மகிந்த கலந்து கொள்ளாததுடன் கருஜெயசூரிய அவர்கள் அதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் இருந்த போது அவரை சுகம் விசாரிக்க செல்லாமையும் அக்குழவினரை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment