Monday, October 27, 2008

தமிழக போராட்டங்களை கண்டித்து இலங்கையில் பேரணிகளுக்கு ஏற்பாடு.





தமிழ் நாட்டில் நடைபெறும் போராட்டங்களை கண்டித்து இலங்கையில் பேரணிகளை நடாத்துவதற்கு ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் கட்சிகள் இணைந்து சிங்கள மக்களை ஒன்று திரட்டி வருகின்றன. ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராடட்டங்களால் இறைமை இரண்டாக பிளவுபடுமென சிங்களக் கிராமங்களில் ஜே.வி.பி பிரச்சாரம் செய்துவருகின்றது. புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் பயங்கரவாதத்தை தூண்டும் செயலென்று சர்வதேச சமூகத்துக்கு வெளிக்காட்டும் வகையில் சிங்கள மக்கள் எழுச்சியடைய வேண்டுமெனவும் விளக்கமளிக்கப்படுகின்றது.

போரில் புலிகள் தோல்வியடைந்து வருகின்றனர். அதனை மூடி மறைப்பதற்காகவே தமிழக முதல்வர் கருணாநிதி போராட்டங்களை நடத்தி வருகின்றார் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொளத்த பிக்குமார் பௌத்த ஆலயங்களில் சிங்கள மக்களுக்கு கூறி வருகின்றனர். சிங்களவர்கள் ஒன்று திரண்டு எழுச்சியடையவில்லையானால் புலிகள் தமிழீழத்தைப் பெற்று விடுவார்கள் என்றும், ஆகவே சிங்கள மக்கள் போராட்டங்களில் ஈடுபடவேண்டுமெனவும் பிக்குமார் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment