இலங்கையிலுள்ள பயங்கரவாதம், இந்தியாவிற்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதை தடுப்பதற்காகவே நாம் இராணுவத்திற்கு அதிக செலவீனங்களை செய்து வருகின்றோம். பயங்கரவாதத்தை அழிப்பதற்கான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியா ஒருபோதும் கூறவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பங்கரவாதத்தை தோற்கடித்து மக்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தற்போது முக்கியமான கட்டத்திலுள்ளது. நாட்டின் இறைமையை பேணுவதற்கும் மக்களை பாதுகாக்கவுமே இராணுவத்துறைக்கு அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் இதில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பில் அதிக செலவினங்களை செய்ய வேண்டியுள்ளது. அமெரிக்காவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கு மேலதிகமான பணம் செலவிடப்படுகின்றது என்பதையும் அவர் தெளிவுபடுத்திக் காட்டியிருந்தார்.
No comments:
Post a Comment