Wednesday, October 8, 2008

முஸ்லிம் வர்த்தகரின் மோட்டார் சைக்கிள் பணம் கையடக்க தொலைபேசி என்பன அபகரிப்பு.



ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலை மகள் பாடசாலை வீதியில் வைத்து ஆயுததாரிகள் சிலர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர். ஏறாவூரின் தமிழ்- முஸ்லிம் எல்லைப் பகுதியில் வைத்து இம் மோட்டார் சைக்கிள் அபகரிக்கப் பட்டுள்ளது. இந்த வீதியில் நின்ற மூன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் இவ் வீதியில் வசிக்கும் சாலைக்குட்டி அப்துல் லத்தீப் என்பவரின் மோட்டார் சைக்கிளையும் அவரிடமிருந்த 13 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்துக் கொண்டு மட்டக்களப்பு பிரதான வீதியூடாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கிணங்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment