ஈழத் தமிழர்களை காப்பதற்காக நீங்கள் தமிழகத்தில் நடாத்தும் போராட்டங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் இப் போராட்டம் புலித் தலைமையின் அழிவு யுத்தத்திற்குப் பலம் சேர்ப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதே எமது மக்களினது விருப்பமாகும். தமிழகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் குறித்து தமிழகத் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அம்மடலில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது ஈழத்தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி நீங்கள் தமிழகமெங்கும் எழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி இது குறித்து எமது மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment