Tuesday, October 14, 2008
துப்பாக்கிச் சூட்டில் மகன் பலி தாயும் மற்றொருவரும் காயம்.
கொழும்பு வெலிக்கடை பண்டாரநாயக்கா மாவத்தையில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மகன் உயிரிழந்ததுடன் தாயும் மற்றொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றுகாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் வெலிக்கடை பகுதியைச் சேர்ந்த ரணதுங்க அராச்சிலாகே திணேஸ் (வயது25) என்பவரே உயிரிழந்வராவார். இங்கு கொல்லப் பட்டவர் பொரளைப் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றின் சாட்சியாவார் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடாக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர கூறியதாவது வெலிக்கடை பண்டாரநாயக்கா மாவத்தை பொல்வத்தைக் குறுக்கு வீதியில் நடந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று காலை 7.30 மணியளவில் இப்குதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரே இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளன்ர்.
No comments:
Post a Comment