புதுமுறிப்புப் பகுதியில் ஆசிரியரும், தந்தையும் செல் தாக்குதலில் பலி.
கிளிநொச்சி, புதுமுறிப்புப் பகுதியில் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை மாலை படையினர் மேற்கொண்ட செல் தாக்குதலில் பாடசாலை ஆசிரியரொருவரும், அவரது தந்தையும் கொல்லப்பட்டுள்ளனர். புதுமுறிப்புக்கு தெற்கே வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவிலேலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் அக்கராயன் கூட்டுறவுச்சங்கத்தின் முன்னால் முகாமையாளரான சின்னையா இராமலிங்கம் (வயது 65) என்பவரும் அவரது மகனான வன்னேரிக்குளம் ஐயானார்புரம் பாடசாலை ஆசிரியருமான இ. விஜயானந்தன் என்பவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் அப்பிதேசத்திலுள்ள 31 வீடுகள் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளது. கொட்டும் மழை நேரத்தில் இடம்பெற்ற இந்த கடும் செல் தாக்குதலினால் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்துள்ளனர்.
0 comments :
Post a Comment