கிழக்கு மாகாண சபையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு.
கிழக்கு மாகாண சபையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் அரச துறையில் வெற்றிடங்களை நிரப்பும் போது இன விகிதாசாரத்தை கவனத்திற் கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவு திட்டம் தொடர்பாக மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து கொள்வதற்கும் மாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்துகொள்ளுவதற்குமான சந்திப்பொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரிமாளிகையில் நடத்தியபோதே மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment