Friday, October 17, 2008

மீனகத்தில் பிள்ளையானின் சகாக்கள் வெறியாட்டம்!



பிள்ளையானது மிக நெருங்கிய சகாவான ஜெயந்தன் தலைமையில் மீனகத்தினுள் நுழைந்த குழவினர் அங்கிருந்த பத்திரிகைகளை பலாத்தாரமாக வாகனமொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ பத்திரிகையான தமிழலைப் பத்திரிகை கடந்த காலங்களில் பிள்ளையானது சுய விளம்பரத்திற்காக பிரயோகிக்கப்பட்டு வந்ததாகவும் ரிஎம்விபி யின் தலைவர் கருணாவின் வருகையின் பின் அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கடந்த சில வாரங்களாக அதன் சேவை வழமைக்கு திரும்பியிருந்தது.

இந்நிலையில் எதிர்காலத்தில் தனது சுய விளம்பரத்திற்கான ஒரே ஒரு தளமும் அற்றுப் போகலாம் என்று அச்சம் கொண்ட பிள்ளையான் தனது விசுவாசிகளை வன்செயலில் இறங்கியுள்ளார். ஜெயந்தனினால் ஏற்றிச் செல்லப்பட்ட பத்திரிகைகளை பறிமுதல் செய்வதற்கு கருணா தரப்பினர் விரைந்த போதும் அவர்கள் மறைந்து விட்டதாகவும் அதைத் தொடர்ந்து அங்கு உருவாகிய பதற்ற நிலைமையை விஷேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. தற்போது தமிழலைப் பத்திரிகை அச்சகத்திற்கு
கருணாதரப்பு போராளிகள் பாதுகாப்பிற்கென நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment