பயங்கரவாத ஒழிப்பும் சமாதான தீர்வும் சமகாலத்தில்.
வடபகுதி அரசியல் சூழ் நிலை குறித்து சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி விளக்கம்: எம்.பி. கருணா அம்மான் அவர்களும் முதன் முறையாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளையும் சமாதானத் தீர்வு முயற்ச்சிகளையும் சம காலத்தில் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். நாட்டின் சம கால அரசியல் நிலைவரத்தையும் வடபகுதி நிலைமையையும் சர்வ கட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறிய போதே ஜனாதிபதி மேற்க்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நேற்றுக் காலை 10.30 மணிக்கு சர்வகட்சி மாநாடு நடைபெற்றது. சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின்னர் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகியன கலந்து கொள்ளவில்லை .
0 comments :
Post a Comment