ஆயுதத்துக்கு அடிமைப்படாமல் வாழ்கின்ற நிலைமையை மக்களுக்கு ஏற்படுத்துவோம்.
தங்கல்லையில் தொழிற்பயிற்சி நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து ஜனாதிபதி உரை.
ஒரு நாட்டையோ இனத்தையோ, அபகரிக்கும் நோக்கத்துடன் நாம் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை மீட்பதற்கான நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்ளுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்துள்ளார். ஆயுதத்துக்கு அடிமைப்படாமல் வாழும் உரிமையையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த உரிமையை நாட்டு மக்கள் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புலிகள் மக்களைப் பணயமாக வைத்து யுத்தம் செய்கின்றனர். மக்களுக்கு காயம் கூட ஏற்படாத வகையிலேயே அரச படையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன்ர். அதற்கான வழிகாட்டல்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி மக்களைப் பட்டிணி போட அரசாங்கம் எவ்விதத்திலும் தயாரில்லை. யார் எத்தகைய பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் அரசாங்கம் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க யூ.எஸ்.எய்ட் நிதியுதவியுடன் தங்கல்லையில் 86 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கு அரசாங்கம் போதியளவு அத்தியாவசிய உணவுப்பொருட்களை அனுப்பி அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றுவதில் சிரத்தை எடுத்து வருகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிந்தார்.
0 comments :
Post a Comment