Wednesday, October 8, 2008

பொலிஸ் காவலரனினுள் பாரிய குண்டுவெடிப்பு.



புதிய காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பொலிஸ் காவலரணுக்குள் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் காவலரண் முற்றாகச் சேதமடைந்ததுடன் பாரிய குழியும் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று காலை 7.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி காவலரணில் கடமையிலிருந்த பொலிஸார் காலை 6.00 மணியளவில் கடமை முடித்து திரும்பியதன் பின்னரே இக்குண்டு காவலரணினுள் பொருத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com