கல்குடா பிரதேசத்தில் நெற்செய்கைக்கு இராணுவம் அனுமதி.
நாம் பயிரிடுவோம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்னும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக பன்னெடுங்காலங்கள் கைவிடப்பட்டிருந்த நெற் செய்கை காணிகளில் இம்முறை 2008 - 2009 கான பெரும்போகச் செய்கை மேற்கொள்வதற்கு இராணுவத் தரப்பினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக மாதுறுஓய கிழக்கு விவசாய நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் ஐ. எல். முஸ்தபா தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அண்மையில் கூட்டமொன்று இடம்பெற்றது. இந்த விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் உரையாற்றிய 231 பிரிகேட் புணாணை சிவில் இணைப்பு அதிகாரி கேர்ணல் பண்டார பெரும்போக நெற் செய்கைக்கான அனுமதியை வழங்கினார். பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கைவிடப்பட்டும் உரிய பிரதேசங்களை விட்டும் .இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோரது நெல் வயல்களில் இம்முறை செய்கை பண்ணப்படவுள்ளது காரமுனை ஆலங்குளம் வெள்ளாமைச் சேனை ஆனை சுட்டகட்டு மியான்குளம் கண்டங்களிலுள்ள 500 ஏக்கர் வயற்பரப்புகளில் எதிர்வரும் போகத்தில் செய்கைபண்ணப்படும் இதன் மூலம் தமிழ் முஸ்லிம் விவசாயிகள் இம்முறை பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
0 comments :
Post a Comment