நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசியப் பாடசாலையில் இடம்பெற்ற களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்கான நடமாடும் சேவையில் 2164பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு 463 பிரச்சினைகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நடமாடும் சேவையில் நீதி மற்றும் சட்டமறு சீரமைப்பு அமைச்சின் ஆலோசகர்
எஸ். திருநாவுக்கரசு மற்றும் பிரதேச செயலாளர் பொலிஸ் அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment