வன்னி சென்ற ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி திரும்பியுள்ளது. ஏ9 வீதியில் சண்டை உக்கிரம்!
ஐ.நா உலக உணவுத்திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்திருந்துது. அரசாங்கம் தெரிவித்துள்ள புதிய வினியோகப் பாதையின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் குழுவொன்று நேற்று ஆராய்ந்ததாக ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருந்தார். ஏ9 பாதையில் இன்று இடம்பெறும் கடும் துப்பாக்கி மற்றும் ஆட்லறி வேட்டுக்கள் காரணமாக தொடர்ந்தும் பயணிக்க முடியாத வாகனத் தொடரிணி ஏற்றிச் சென்ற பொருட்களுடன் திரும்பி வந்துள்ளதாக இலங்கைக்கான ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் அடங்கிய ஐ.நா.வின் முதலாவது வாகனத் தொடரணி கடந்த 2ஆம் திகதி வன்னிக்கு அனுப்பப்பட்டது இந்த வாகனத் தொடரணி ஓமந்தை புளியங்குளம் மாங்குளத்தினூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment