வன்னிக்கு நேற்று முன்தினம் 51 உணவு லொறிகள் அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை மேலும் 75 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் என அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு வாரமும் உணவு லொறிகளை வன்னிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனடிப்படையில் டிசெம்பர் மாத இறுதிக்குள் மொத்தமாக 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நிவாரட்ணவே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை இலவசமாக விநியோகிக்கும் அரசின் மணிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மை அழைத்து வன்னிக்கு 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். பசில் ராஜபக்ஷவின் தலைமையில் உணவுப் பொருட்களை அனுப்பும் நடவடிக்கை இப்போது துரிதப் படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை வவுனியாவில் இருந்து 51 லொறிகள் வன்னிக்கு அனுப்பப்பட்டன. அந்த உணவுப் பொருட்கள் அங்குள்ள களஞ்சியங்களில் இறக்கப்படுகின்றன. அவை முற்றாக இறங்கி முடிக்கப்பட்ட பின்னர் உடனடியாக மக்களுக்கு விநியோகிக்குமாறும் வெற்று லொறிகளை வவுனியாவுக்கு அனுப்பிவைக்குமாறும் நான் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளேன். வெற்று லொறிகள் வந்ததும் ஓரிரு தினங்களில் 75 உணவு லொறிகள் மீண்டும் வன்னிக்கு அனுப்பிவைக்கப்படும. ஒவ்வொரு வாரமும் உணவு லொறிகளை அனுப்ப நாம் தீர்மானித்துள்லோம் அதனடிப்படையில் டிசெம்பர் மாத இறுதிக்குள் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி முடிக்கப்படும். ஐ. நா வின் உலக உணவுநிகழ்சித் திட்டமும் அரசும் இணைந்துதான் இந்தப் பனியை முன்னெடுக்கின்றன. உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றது. இன்னும் இரண்டொரு வாரங்களில் உணவுப் பொருள் அல்லாத அத்தியாவசியப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் - என்றார்.
No comments:
Post a Comment