60 வகை உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை!
60 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. சீனாவில் பால்மா வகைகளில் மெலமைன் என்ற நச்சுத்தன்மை கலந்திருந்ததால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்தே இலங்கையில் இந்த இறக்குமதித்தடை விதிக்கப்பட்டுள்ளது. பல உலகநாடுகள் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளைப் பின்பற்றியே இலங்கை சுகாதார அமைச்சு இந்தமுடிவை எடுத்துள்ளது. பல்பொருள் அங்காடிகள் உட்பட சகல விற்பனை நிலயங்களிலும் குறிப்பிட்ட 60 வகைப் பொருட்களையும் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது விற்பனையில் உள்ள பிஸ்கட்கள் சொக்கலட்டுக்கள் போன்றவற்றிலும் மெலமைன் கலந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment