நவ 6 முதல் டிச 8 வரை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை மன்றில் பிரசன்னமாய் இருக்குமாறு பணிப்பு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2009ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நிறைவடையும் டிசம்பர் 08.ஆம் திகதி வரை ஆளும்தரப்பு உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. வரவு செலவுதிட்டம் மீதான விவாதம் நடைபெறுகின்ற தினங்களில் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தவறாமல் பிரசன்னமாக இருக்குமாறு ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாகவே ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குழு நிலை விவாதம் நடைபெறுகின்ற நாட்களில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் கட்டாயமாக மன்றில் பிரசனமாய் இருக்க வேன்றுமென்றும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்கட்சியினர் முன்வைக்கின்ற வாதப் பிரதி வாதங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே விவாத நாட்களில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பிரசன்னமாய் இருக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment