Friday, October 3, 2008
51 லொறிகளில் வன்னி பகுதிக்கு உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு
வன்னிப் பகுதிக்கான உலக உணவுத் திட்டத்தின் கீழ் 51 லொறிகளில் நேற்று காலை உணவுப் பொருட்கள் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன. உலக உணவுத்திட்டத்திற்கு சொந்தமான 30 பெரிய லொறிகளிலும் தனியாருக்குச் சொந்தமான 21 லொறிகனிலும் இந்த உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த வாகனத் தொடரணியோடு உலக உணவுத் திட்ட அதிகாரிகளும் உடன் சென்றுள்ளார்கள. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள 6 இடங்களில் இந்த பொருட்கள் கொண்டு சேர்கப்படும் என்றும் அவற்றை அங்குள்ள அரச அதிகாரிகள் பொறுப்படுத்து இடம்பெர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்வார்கள் என்றும் உலக உணவுத்திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வன்னிப் பகுதியிலிருந்து ஐ .நா. அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவணங்களும் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அங்கிருந்து வெளியேறியதன் பின்னர் முதல் தடவையாக நேற்று வியாழக்கிழமை 51 லொறிகளில் உலகத் உணவுத் திட்ட அதிகாரிகள் அந்த பகுதிக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது
No comments:
Post a Comment