Thursday, October 30, 2008

பயங்கரவாதத்தினால் மரணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 50 இலட்சம்வரை நஷ்டஈடு.

பயங்கரவாதத் தாக்குதல்களினாலோ அல்லது திடீர் அனர்த்தங்களினாலோ மரணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென வழங்கப்படும் நஷ்டஈட்டை 50 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது விடயமாக பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் எம்.எச். முகமது முன்வைத்த கோரிக்கையை அமைச்சரவைக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. மேற்படி காரணங்களினால் மரணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது நஷ்டஈடாக 10 இலட்சம் வழங்கப்படுகின்றது. இத்தொகையை 50 இலட்சம் ரூபாவரை அதிகரிக்கும் நோக்கில் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையிலும் பயங்கரவாதத் தாக்குதல் அல்லது திடீர் அனர்த்தங்களினால் மரணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒரு கோடி ரூபா நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது மருத்துவ காப்புறுதியாக 2 இலட்சம்வரை அதிகரிக்கவும் அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment