Sunday, October 19, 2008
வன்னிக்கு மேலும் 50 லொறிகளில் அத்தியவசியப் பொருட்கள்.
அத்தியவசியப் பொருட்களை ஏற்றிய ஐம்பது லொறிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வன்னிக்கு அனுப்பப்பட இருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சாள்ஸ் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை உலக உணவு திட்டத்தினால் ஐம்பது லொறிகளில் உணவுப் பொருட்கள் வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான உடுதுணிகளையும் அத்தியவசியப் பொருட்களையும் தங்கு தடையின்றி அனுப்பி வைக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவித்த அரசாங்க அதிபர் புளியங்குளத்திற்கும் நெடுங்கேணிக்கும் இடையிலான இருபது கிலோ மீற்றர்; பாதைகளை செப்பனிட உடனடியாக பதினைந்து லட்ச ரூபாவை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியவசியப் பொருட்கள் மருந்து வகைகள் போன்றவற்றை அந்தந்த மாவட்டங்களில் கையிருப்பில் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா அரச அதிபர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment