விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வைத்தியசாலை புனரமைப்பு, அமெரிக்கா ரூ. 5 கோடி ஒதுக்கீடு.
புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளை புனரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவியாக 5 கோடி ரூபாவை வழங்க ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எய்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிதியுதவி மூலம் மட்டக்களப்பு கரடியனாறு கிராமிய வைத்தியசாலை, நாவற்காடு மத்திய மருந்தகம் மற்றும் மருத்துவ அதிகாரி அலுவலகம் என்பன புனரமைத்து மேம்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பராமரிப்பு, போசாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் அப்பிரதேசங்களிலுள்ள அரசாங்க மருத்துவ நிலையங்களை புனரமைத்து மேம்படுத்துவதற்கு சுகாதார பராமரிப்பு போசாக்குத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகின்றது.
0 comments :
Post a Comment