Monday, October 20, 2008

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை குத்திக்கொலை! மகனுக்கு 31ஆம் திகதிவரை விளக்கமறியல்.



தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொலை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மகனை எதிர் வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.பிரியந்த வெளிகேபொல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தில் வெளிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.ஜே.முதியன்சலாகே லொக்கு பண்டார வயது 59 என்பவரே உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் நீண்ட நாட்களாக பெண் ஒருவரை காதலித்துள்ளார். இப்பெண்ணை திருமணம் முடிக்க தனது தந்தையிடம் அனுமதி கோரியபோது அதற்கு தந்தை எதிர்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தையை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார். இதனை தடுக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் பிரதேச வாசி ஒருவருமாக மொத்தம் 03 பேர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட வெளிகேபொல பொலிஸார் சந்தேக நபரை கடந்த வெள்ளிக்கிழமை மாலை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com