Tuesday, October 28, 2008

மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் குண்டுவீச்சு. 3 பொலிஸ், சிவிலியன் காயம்.


மட்டக்களப்பு, கல்லடியில் நேற்றிரவு 7.10 மணியளவில் கைக்குண்டு வீச்சு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 3 பொலிஸாரும் ஒரு சிவிலியனும் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் மீது இக்கிரனைட் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே இக்கைக்குண்டை வீசிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியதுடன், தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment