2ஆயிரம் திரையுலகத்தினர் பேரணி! மனித சங்கிலியிலும் பங்கேற்பர்.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான யுத்தைத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைகளைக் தொடங்கக் கோரி வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டுநிற்கிறோம் என தமிழக எம்.பி.க்கள் பதவியைத் துறக்க முன்வந்துள்ளனர். தமிழ் திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் வருகிற 19ஆம் திகதி பேரணி பொதுக்கூட்டம் நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்த உள்ளனர். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்த்தர்கள், தியேட்டர் அதிபர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த அனைவரும் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என இயக்குனர் பாரதி ராஜா நேற்று சென்னையில் நிருபர்கள் மத்தியில் பேசுகையிலேயே கூறினார். அவர் மேலும் கூறியதாவது எழூம்பூரில் இருந்து இன்று மாலை 3.30 மணிக்கு தனி ரயிலில் திரையுலகத்தினர் 2 ஆயிரம் பேர் புறப்படுகிறார்கள் 19ம் திகதி காலை 6 மணிக்கு அந்த ரயில் ராமேஸ்வரம் போய்ச்சேரும். ரயில் நிலையம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு ஊர்வலம் புறப்படும். பஸ் நிலையம் அருகில் களக்காடு என்ற இடத்தை ஊர்வலம் அடையும். அங்குள்ள 15 ஏக்கர் நில பரப்பில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் பொதுக்கூட்டத்தில் அனைத்துச் சங்க பிரதி நிதிகளும் பேச இருக்கின்றனர். இரவு 7.30மணிக்கு கூட்டம் முடிந்து தனி ரயிலில் அனைவரும் சென்னைதிரும்புகின்றனர்.
0 comments :
Post a Comment