காத்தான்குடியில் 2 இளைஞர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின.
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு இரு இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. கைகள் கால்கள் கண்கள் கட்டப்பட்டு மரமொன்றுடன் இணைத்துக் கட்டப்பட்ட நிலையில் இவ்விரு சடலங்களும் இரவு 9.30 மணியளவில் கரை ஒதிங்கியுள்ளன. இவ்விரு சடலங்களையும் அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு தெரிவித்ததையெடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அடையாளம் காணமுடியாதளவுக்கு உருக்குலைந்த நிலையிலிருந்த இரு சடலங்களையும் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மட்டக்களப்பில் தினமும் ஆட்கடத்தல் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் அவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர்களுடைய சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment