Friday, October 24, 2008

போர்ச் சூழலினால் 26,619 வீடுகள் சேதம், புதிய ஆய்வில் தகவல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி போர்ச் சூழலினால் 26,619 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 3,613 வீடுகள் முழுமையாகவும் 4,146 வீடுகள் பகுதியாகவும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 4,752 வீடுகள் முழுமையாகவும், 1,839 வீடுகள் பகுதியாகவும், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 6,384 வீடுகள் முழுமையாகவும், 1,480 வீடுகள் பகுதியாகவும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 2,135 வீடுகள் முழுமையாவும், 2,252 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. போர்ச் சூழலினால் சேதமடைந்த வீடுகளின் விபரங்களை திரட்டும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை மேற்படி 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விபரம் திரட்டும் பணி நிறைவு பெற்றுள்ளதாக ஜெகநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com