விஞ்ஞானக் கண்காட்சி ஒன்றைப் பார்வையிட்ட மாணவர்கள் வீடுதிரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த லொறி பாதையை விட்டு விலகி தடம் புரண்டதனால் 23 மாணவர்கள் கடுங்காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிபிளையை சேனாபதிகம என்ற இடத்தில் கடந்த ஞாயிறு 19ஆம் திகதி மாலை 07 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. பிபிளையின் ஊவா- வெல்லஸ்ஸ மத்திய மாகா வித்தியாலய
மண்டபங்களில் நடைபெற்று வந்த விஞ்ஞான கண்காட்சியினைப் பார்வையிட்டதன் பின்னர் லொறி ஒன்றில் மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே லொறி விபத்துக்களாகியுள்ளது. இவ் விபத்து தொடர்பாக பிபிளைப் பொலிஸார் நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment