கண்காட்சி பார்வையிட்டு வீடு திரும்புகையில் பிபிலையில் சம்பவம்.
விஞ்ஞானக் கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த லொறி, பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 23 மாணவர்கள் கடுங் காயங்களுக்குள்ளாகி பிபிலை, பதுளை அரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்து பிபிலை சேனாபதிகம பகுதியில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயங்களுக்குட்பட்டுள்ள மாணவர்கள் பதுளை பிரதேசத்தின் கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களாவர். பிபிலையின் ஊவா- வெல்லல்ல மத்திய மகா வித்தியாலய மண்டபங்களில் நடைபெற்று வந்த விஞ்ஞானக் கண்காட்சியினை பார்வையிட சென்ற அவர்கள் லொறியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பாக பிபிலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பிபிலை அரசினர் மருத்துவமனையில் 15 பேரும் பதுளை அரசினர் மருத்துவமனையில் 8 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
No comments:
Post a Comment