மட்டுநகர் வெபர் மைதானத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணா பங்கேற்பு. 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வெள்ளம்.
வன்னிப் பிரதேசத்தில் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அவர்கள் விரும்புகின்ற பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி நகர அனுமதிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும். இன்று இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மக்களின் பெயரால் அங்கு மேற்கொள்ளுகின்ற போராட்டங்கள் அழிந்து போய் உள்ள புலிகளியக்கத்தின் மறுசீரமைப்புக்க உதவக் கூடாதெனவும் உலகிற்கு உரத்து சொல்லுமுகமாக கிழக்க வாழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களும் மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment