மட்டக்களப்பிலிருந்து 204 அகதிகள் நேற்று திருகோணமலைக்கு அனுப்பிவைப்பு.
போர்ச் சூழல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேனையூர் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்பதி, மண்முனை வடக்கு, செங்கல்லடி, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 61 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் நேற்று (30.10.2008) தமது சொந்த இடங்களில் மிளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை இவர்கள் எட்டு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட பாட்டாளிபுரம், பள்ளிக்குடியிருப்பு, கட்டபறிச்சான் தெற்கு ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து எஞ்சியிருந்தவர்களும் நேற்றுக்காலை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு செயலகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment