கிழக்கில் 2 வது மேன்முறையீட்டு நீதிமன்றம் மட்டக்களப்பில் பிரதம நீதியரசரால் நேற்று திறந்து வைப்பு.
கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நேற்று (04-10-2008) மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந் நீதிமன்றத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். மட்டக்களப்பிலுள்ள நீதிமன்றக்கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் மட்டக்களப்பு உயிர் நீதிமன்ற நீதிபதி பி. சொர்ணராஜா. மேன் முறையீட்டு; நீதிமன்ற நீதிபதி எஸ். பரமராசா வடக்கு கிழக்கு நீதி நிருவாகத்திற்கான மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். தியாகேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ஏ. எல். எம். சகாப்தீன் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா கல்முனை மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். சந்திரராணி சிவபாதம் நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஜயதிலக உட்பட நீதிபதிகள் சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மட்டுநகருக்கு முதன் முறையாக வருகை தந்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு மகத்தான வரவேற் பளிக்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பொது மக்களின் நன்மை கருதி துரிதமாக சிவில் மேல் முறையீடுகளை விசாரிப்பதற்காக மாவட்டங்களில் இயங்கும் மேல் முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் இந் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment