Sunday, October 5, 2008
மூதூர் கிழக்கிலுள்ள கட்டைப்பறிச்சான் பகுதியில் 1900 குடும்பங்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை.
மூதூர் கிழக்கிலுள்ள கட்டைப்பறிச்சான் சேனைபுரம் நவரட்ணபுரம் பாட்டாளிபுரம் பகுதிகளில் சுமார் 1900 குடும்பங்கள் நாளை மறுதினம் 7ஆம் திகதி முதல் இம் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மூதூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விசேட கூட்டமொன்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றபோதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்; பெயர்ந்து மட்டக்களப்பு மூதூர் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களையும் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக பாதுகாப்புப் படையினரால் சிபார்சுசெய்யப்பட்ட மூதூர் கிழக்கிலுள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளான கட்டைப்பறிச்சான் சேனைபுரம் நவரட்ணபுரம் பாட்டாளிபுரம் ஆகிய கிராம மக்களை இம்மாதம் 7ஆம் திகதி முதல் மீளக்குடியேறுவதற்கான அனுமதியினை பாதுகாப்புப படை அளித்திருக்கிறது. கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. கடந்த ஒரு வருட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீளக் குடியேற்றுவதற்குள்ள தடைகள் என்ன என ஆராயவே இக் கூட்டம் கூட்டப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் அரசாங்க அதிபர் மேஜர் டி. ஆர். டி. செல்வா உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment