Tuesday, October 21, 2008

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 16 இலங்கையர் கிழக்குத் திமோரில் கைது.



அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்வதற்கு முயற்சித்த 16 இலங்கையரையும் 4 இந்தோனிசியரையும் கிழக்குத் திமோர் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். கிழக்குத் திமோரின் தெற்கு கரையிலுள்ள பெற்றானோ பகுதியிலேயே இந்த 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருந்ததை கைதானவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் ஆயினும் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லையெனவும் கிழக்கு திமோரின் குடிவரவு திணைக்கள பிரதிப்பணிப்பாளர் போயவிடாரிபைரோ தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவிலிருந்து தரைவழியாக கிழக்கு திமோருக்குள் இலங்கையர்கள் பிரவேசித்ததாக கருதுகின்றனர். ஆனால், இந்தோனேசியர்கள் மேற்குத் திமோரின் பெறூன் துறைமுகத்திலிருந்து படகில் பெற்றானோவுக்கு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வார இறுதியிலேயே முடிவடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment