13 இந்திய மாலுமிகள் மீட்பு
சோமாலியா கடற்கொள்ளையரால் கடந்த வெள்ளியன்று கடத்திச் செல்லப்பட்ட 13 இந்திய மாலுமிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த எம்.வி.ஸ்டோல்ட்வலோர் என்ற வர்த்தக கப்பல் ஆசியாவிலிருந்து சோமாலியாவிற்குச் சென்று கொண்டிருந்தது. கடந்த வெள்ளியன்று இந்தக்கப்பலை பண்ட்லான்ட் கடலோரகாவல் படையினர் என்ற போர்வையில் வழிமறித்த சோமாலிய கடற் கொள்ளையர் இவர்களைக் கடத்திச் சென்றனர். சோமாலியாவின் வடக்கு கடற்கரை பகுதிக்கு கடற்கொள்ளையர் கப்பலுடன் சென்றபோது அந்த நாட்டின் வீரர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். இரு தரப்பினருக்குமிடையே நடந்த கடுமையான சண்டையில் 4 கடற்கொள்ளையர் பிடிபட எஞ்சிய 4 பேரும் தப்பியோடி விட்டனர். கடற்கொள்ளையரிடம் பிடிட்டிருந்த கப்பலும் மாலுமிகளும் சேதங்கள் எதுவுமின்றி மீட்கப்பட்டதாக சோமாலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆண்டில் மட்டும் சோமாலிய கடற்பகுதியில் சென்ற 30 கப்பல்கள் கடத்தப்பட்டு அவற்றில் 9 கப்பல்கல் 200 மாலுமிகளுடன் கடற்கொள்ளையரிடம் பிடிபட்டுள்ளதாக சர்வதேச கடல் வாணிப அமைப்பின் கோலாலம்பூர் கடற்கொள்ளை தடுப்பு மைய தலைவர் நோயல் சூங் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment