Thursday, October 30, 2008

இந்தியாவில் 13 க்கும் மேற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு 56 பேர் பலி 300 க்கும் அதிகமானோர் காயம்.



இந்தியாவின் அசாம் மாநிலத்தில 13 க்கு மேற்பட்ட குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்திருப்பதாகவும் அதில் 4 குண்டுகள் நகரப்புறங்களிலும் ஏனையவை நகருக்கு வெளியே வெடித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. ரிமோட் கொன்றோல் மூலம் நிகழ்த்தப்ட்டுள்ள இக் குண்டு வெடிப்புகளின் இழப்பு விபரங்கள் சரியாக தெரியவராத போதும் 56 பேர் பலியாகியும் 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருப்பது ஊர்ஜிதப்படுத்துப்பட்டுள்ளது. இக்குண்டுவெடிப்புகள் மிகவும் சன நெருக்கடி உள்ள பிரதேசங்கில் இடம்பெற்றுள்ளதுடன் ஒரு குண்டு மாகாண அமைச்சரின் காரியாலயமருகே வெடித்துள்ளது. இத்தாக்குதல்களில் ஒன்று கிரனேட் தாக்குதல் எனவும் தெரியவருகின்றது.

இக்குண்டுத்தாக்குதலுக்கான பொறுப்பாளிகள் யார் என்பது திட்டவட்டமாக தெரியவராதபோதும் இந்தயாவின் வடகிழக்கே பங்களாதேசம், மியன்மார், பர்மா, சீனா வுக்கு இடைப்பட்ட பிரதேசங்களின் பல பிரிவனைவாத ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்


No comments:

Post a Comment