மட்டக்களப்பிலிருந்த 120 குடும்பங்களைச் அகதிகள் கட்டைபறிச்சானில் மீள் குடியமர்வு
யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து இடம்பெர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் நேற்று அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த இக் கிராமத்தைச் சேந்தவர்கள் அவர்களின் சொந்த கிராமமான கட்டைபறிச்சான் தெற்கு கிராமத்தில் ...மீள் குடியமாதப்பட்டனர் 120 குடும்பங்களைச் சேர்த 377 பேர் 13 பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு அவர்களின் சொந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு உதவித் திட்டப்பணிப்பாளர் ஏ.எல். எம். அதீப் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment