கணவனைக் கொலை செய்த பெண்ணுக்கு ஒரு வருடகால சிறை 1000 ரூபா அபராதம்
தமது கணவனைக் கொலை செய்த பெண்ணொருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேன ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்
தண்டனையுடன் ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார். 2001 ஜனவரி 7 ஆம் திகதியன்று மாத்தறை சுல்தானா கொடைவைச் சேர்ந்த 54 வயதுடைய நபரைக் கொலை செய்தார் என அவரின் மனைவியான கே.எம். நந்தாவதி (வயது 52) என்பவருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணையில் தமது கணவர் ஒவ்வொரு நாளும் மது போதையில் வந்து தன்னையும் பிள்ளைகளையும் அடித்து துன்புறுத்துவார் எனவும் இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட தான் பட்டியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டேன் எனவும் பெண்மணி தெரிவித்தார்.
...............................
0 comments :
Post a Comment