10 வயது பாடசாலை மாணவன் வாய்க்கால் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணம்
பத்து வயது பாடசாலை மாணவன் ஒருவன் வாய்க்காலில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட தும்பங்கேணி என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது. நடராஜா நவனீதன் என்னும் மாணவன் அவரின் வீட்டுக்க அருகாமையிலுள்ள வாய்க்காலில் குளிக்கும் போது வலிப்பு நோய் ஏற்ப்பட்டு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இவரின் மரண விசாரணை மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த . காராளசிங்கத்தினால் நடத்தப்பட்டது. களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்தியசாலை அதிகாரி கே. வசிகரன் மேற்கொண்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து நீரில் மூழ்கி மூச்சுத்திணறியதால் மரணம் ஏற்ப்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்தார். நீரில் மூழ்கி மூச்சித்திணறியதால் மரணம் சம்பவித்ததாக மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார் இறந்தவரின் தாயாரான ந. சந்தணப்பிள்ளை சாட்சியமளித்தார்.
0 comments :
Post a Comment