Monday, October 6, 2008

06.10.2006 வன்னிப்புலிகளை துடைத்தொழிக்கும் வீரச்சமரில் வீரகாவியமான லெப் கேணல் இசையாளன் உட்பட 07 வீரமறவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி.










லெப் கேணல் இசையாளனின் நினைவுக் கவிமலர்..

மூன்று தமிழ்களும் ஓங்கி ஒலிக்கும் எங்கள் கிழககுத் தாயின் அன்னைமடி அன்னியனின் பிடியில் இருந்த போது தன் தாயின் வயிற்றில் இருந்து கால் துடித்து வீரம் செறிந்தவனாய் பிறந்தவன் எங்கள் வீரவேங்கை சத்தியன். இவன் பிறக்கும் போது தமிழ் மண்ணினது கண்ணீர் இவன் காலடி மண்ணில் பட்டதும் அந்த இளம் பிஞ்சின் நெஞ்சுரத்திலிருந்து கால்கள் மெதுவாக அசைந்து கொண்டது. இவன் கால்கள் வீரம் என்றும் ஓயாது விரிந்து இருக்கும் எங்கள் வீர நிலத்தில் பட்ட இடம் என்றும் அழியாத சுவடுகளாய் இவன் மழலை இப்படியாக வளர்ந்து வரும் வேளை கிழக்கின் தாய் படும் அவலம் கண்டு இவனின் அரும்பு மீசைகள் துடிக்கத் தொடங்கின.

கிழக்கின் விடியலுக்காய் சிந்திக்கும் நேரம் இதுவென இவன் பாதச் சுவடுகள் மெதுவாக அசைபோட்டன. இதுதான் கிழக்கன்னையின் முடிவென்று வீரத் தாலாட்டு ஓங்கி ஒலிக்க சீறியெழுந்து நடந்தான. துனுக்கிடும் சிலந்தி போன்ற இவன் மாய வேலைகள் இன்னும் கிழக்கன்னையின் பார்வையிலிருந்து விலகவில்லை தானைத் தலைவன் கருணாஅம்மான்.. அவன் வழிவகுத்து வீர நடை போடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தான்.
நீயென்று வானரம் ஆயிரம் பார்த்து வீரக்கதைகள் பல சொல்லி வெற்றி நடைபோட்ட உன் வீரப்பாதையில் உன் வீரநகர்வு கண்டு ஓடி ஒழிந்தது துரோகக் கும்பல். உன் பொன் நடையும் புன்சிரிப்பும் புலப்படும் பொய்மையற்ற பேச்சும் இன்னும் அழியாத சுவடுகளாய் புதையுண்டு இருக்கின்றன எம் மனங்களில்..

இசையாளனே... நீ கிழக்கின் தோழனே என்று முத்தமிழ் முரசொலிக்கும் மட்டு மண்ணில் பாடும் மீன்கள் கோர்க்கும் வண்ணத்தமிழில் கவிகவியாக வடிக்கின்றன. மீன்மகள் பாடும் இந்த கிழக்கன்னையின் மடியில் நீ ஆற்றிய பணிகள் என்றும் அழியாதவை! வண்ணக்கோலம் போடும் உந்தன் கண்ணில் கிழக்கன்னையின் அவலமே தெரிந்தது.. புறப்படு புறப்படு புதிய உலகு காணும் வரை போராடு என்று சொல்லும் தலைவன் வழிப்படி உன் படை..

இசையாளனே நீ கிழக்கின் குரல் என்று பேசும் இடமெங்கும் புயலாய் வீசினாய் போர் ஓய்ந்து மின்னும் கிழக்குத் தமிழருக்கு வாழ்வமைக்க விரைந்தாய்! அன்று நெருப்பாறும், நெடும் காடும், இடைவந்த போதும் கிழக்கு மண்ணில் விருப்பு கொண்டதால் நிமிர்வோடு எம் இனத்தின் காவியத் தலைவன் வழிகாட்டலில் 05.10.2006 அன்று நகர்த்தினாய் உன் படையை. பௌர்ணமி நிலவின் ஒளியில் தெரியும் நிழல் கண்டு உயிருக்கு அஞ்சுவது நானில்லை என்று துரோகிகளின் வீழ்ச்சி நிலையை ஒழிக்க களமாடிய இறுதி வேளையில் சாவின் மூச்சுவரை மக்களின் விடுதலைக்காய் உரக்க ஒலித்த உன் விடியற்க்குரல் ஓய்ந்ததை கேட்ட எம் மனங்கள் மௌனம் சபித்தது!!

குற்றுயிரில் வாடும் உன்னைக் கண்டு குவளையிலே நீர் கொடுக்க வந்தவனை விதையுண்ட உன் வித்துடலை கண்டு விம்மிய அவன் மனம் வெடிக்காத இதயத்தின் விளிம்புகளாய் இறுதிவரை களமாட துணிந்தது. கிழக்கன்னையின் மடியில் மரணித்த இசையாளனே! நீ விட்டுச் சென்ற இலட்சியப் பயணத்தை உன் புனிதமான இன் நினைவு நாளில் தொட்டுத் தொடர்வோம் என உறுதியளிக்கிறோம்..

ரிஎம்விபி சார்பாக தலைமையக அலுவலகத் தொடர்பாளர்.. -லவனியன்

No comments:

Post a Comment